×

ஜாதவுக்கு வக்கீலை நியமிக்க இந்தியாவுக்கு ஏப்ரல் 13ம் தேதி வரை கெடு

புதுடெல்லி: இந்திய கடற்படையில் பணியாற்றியவர் குல்பூஷன் ஜாதவ் (51). இவர் தனது நாட்டில் உளவு பார்த்ததாக பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது. இவருக்கு கடந்த 2017ம் ஆண்டு அந்த நாட்டு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், ஜாதவின் தண்டனையை நிறைவேற்ற  பாகிஸ்தானுக்கு தடை விதித்தது.

அவருக்கு இந்தியாவின் சட்ட உதவிகள் கிடைப்பதற்கு அனுமதிக்கும்படியும் கடந்த 2019, ஜூலையில் உத்தரவிட்டது. இருப்பினும், இந்திய தூதரக அதிகாரிகள் ஜாதவை சந்திக்க விடாமல் பாகிஸ்தான் அதிகாரிகள் அடிக்கடி முட்டுக்கட்டை போட்டனர். இந்நிலையில், சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஜாதவின் தண்டனையை குறைப்பது தொடர்பான வழக்கு விசாரணை, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ஜாதவுக்கு ஆதரவாக வாதிடுவதற்கான வழக்கறிஞரை ஏப்ரல் 13ம் தேதிக்குள் நியமிக்கும்படி இந்தியாவுக்கு உத்தரவிடப்பட்டது.

Tags : India ,Jadhav , Advocate for Jat, India, Dead
× RELATED தேர்தல் ஆணையரை சந்திக்கும் I.N.D.I.A. கூட்டணி தலைவர்கள்